அமித்ஷா டெல்லியில FLIGHT ஏறுனா... தமிழ்நாட்டுல அள்ளு விடுது! நயினார் ஃபயர் ஸ்பீச்
அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறினாலே தமிழகத்தில் பதறுகிறார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது என அமித் ஷா பேச இருப்பதாகவும் அவர் டெல்லியில் விமானம் ஏறினாலே தமிழகத்தில் பதறுவதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், மக்களை ஒருங்கிணைத்து அநீதிகளுக்கு எதிராக ஒரணியில் திரட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் முன்னெடுப்பு. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களை சாதி, மதம், அரசியல் கடந்து ஒருங்கிணைக்கவும் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்பதை விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரன், ஓரணியில் காவல் நிலையங்களில் மரணங்கள் நடந்து கொண்டிருக்கிறது என கூறினார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனால் பரவாயில்லையா என மக்கள் நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதற்கு அதைப் பற்றி பேச அவர் யார் என்றும் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் உள்ளே ஒன்று வெளியே ஒன்றை வைத்துக்கொண்டு திருமாவளவன் பேசுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டு இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய திருமா, தான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும் என்றும் பாஜகவால் அதிமுக பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணம் உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம் எனக் கூறிய திருமாவளவன் திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி கட்சி முழக்கத்தை வைத்துள்ளதாக கூறினார். அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக திருமாவளவன் பேசி வரும் நிலையில், வேங்கை வயல் பிரச்சனை பற்றி அவர் பேசியதில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கம்யூனிஸ்டுகள் பேசி வருவதாகவும் கூட்டணியில் இருந்து கொண்டு வெளிப்படையாக பேசும் கம்யூனிஸ்டுகளுக்கு பாராட்டுக்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கேமராவை பிடுங்கி போடுங்க.. நிதானத்தை இழந்த வைகோ! மன்னிப்புக்கோர நயினார் வலியுறுத்தல்..!
இதையும் படிங்க: திமுக லட்சணம் ஊருக்கே தெரியும்... இதுல பகல் கனவு வேற! விளாசிய நயினார் நாகேந்திரன்