வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நிலையில் அவரது மனைவியிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், மேம்படுத்தல் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெரும் தொகை வசூலித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் போலீஸ் கஸ்டடியில் உள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவரை விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடங்கியது. தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து கட்சி நிதி என்ற பெயரில் பெருமளவு தொகை வசூலிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் போது பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள், மொபைல் போன்கள், கணினிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

சில உதவியாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.அக்டோபர் 26 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். கைதுக்குப் பிறகு அவர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் மூன்று மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் விதித்து புழல் சிறையில் அடைத்தது.பின்னர் போலீசார் அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: ரூ.400 கோடி எங்கப்பா?… சிக்கியது முக்கிய வீடியோ ஆதாரம்… அன்பில் மகேஷுக்கு இறங்கிய அடுத்த இடி..!

இந்த மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்றம், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. நவம்பர் 4 மாலை வரை அவர் போலீஸ் காவலில் இருப்பார் என உத்தரவிடப்பட்டது. விசாரணைக் காலத்தில் அவரது வழக்கறிஞர் தினமும் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகு அன்பில் மகேஷ் போலீஸ் கஸ்டடியில் எடுத்துச் செல்லப்பட்டு வேப்பேரியில் விசாரணை தொடங்கியது.

கைதானவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. பணப் பரிவர்த்தனைகள், தொடர்புடைய நபர்கள் மற்றும் பணம் எங்கு சென்றது என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. வங்கிக் கணக்குகள் மற்றும் ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விசாரணை மேலும் விரிவடைந்து வரும் நிலையில், அன்பில் மகேஷின் மனைவியையும் விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” … நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய ‘அன்பில்’… காரசார விவாதம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी