×
 

எத்தனை தொகுதிகள்..? ராஜ்யசபா சீட் கிடைக்குமா? பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி தீவிர ஆலோசனை..!

பாமக நிர்வாகிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக அன்புமணி தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நகர்வுகள் வேகமெடுத்தன.

பாமகவில் நீண்டகாலமாக நிலவி வரும் உள் கட்சி மோதல் இந்த கூட்டணி விவகாரத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே தலைமை மற்றும் கொள்கை விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டுகளில் ராமதாஸ் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில், அன்புமணி தரப்பு அதிமுகவை நோக்கி திரும்பியது.

முக்கிய நிகழ்வாக, அன்புமணி ராமதாஸ் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அதிமுக பாமக இடையே சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று NDA கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீண்டும் இணைந்துள்ளது. மேலும் பல புதிய கட்சிகள் என் டி ஏ கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்... கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்..! வலுக்கும் கண்டனம்..!

வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் அன்புமணி கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்பது குறித்தும் ராஜ்ய சபா சீட் உறுதி செய்வது தொடர்பாகவும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: 1100 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை... அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share