#BREAKING: ஓரங்கட்டப்பட்ட அன்புமணி…கூட்டணி முடிவெடுக்க ராமதாசுக்கே முழு உரிமை! பரபரக்கும் அரசியல் களம்
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவு எடுக்க ராமதாஸுக்கு முழு உரிமை இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக விதிகளில் திருத்தம் செய்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமதாஸ் உருவாக்கப்பட்ட பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை தொடர்பாக கூறப்பட்டது. அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ராமதாசுடன் இருப்பவர்கள் மற்றும் ராமதாஸ் பற்றியும் மிகவும் அவதூறாக அநாகரீகமான, மனதை புண்படுத்தும் செய்திகளை பரப்பி ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
பாமகவினருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தேர்தல்களில் பாமக வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்குவதாகவும் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ராமதாசுக்கே அதிகாரம் இருப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தான் கட்சியின் தலைவர் என்றும் நிறுவனர் மற்றும் செயல் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பாமகவின் தலைவர் ராமதாஸ் தான்… பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம்!
ராமதாஸின் அனுமதி பெறாமல் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கட்சியை பிளவுபடுத்த அன்புமணி செயற்பட்டதாகவே கருதப்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் படிவங்களை கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாஸிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் எனக்கு கூறப்பட்டுள்ளது. பாமகவின் தொலைக்காட்சியை திட்டமிட்டு அன்புமணி அபகரித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிறுவனரிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்று அவர் முன்னிலையில் பொதுக்குழு நடத்தும் படியாக பாமகவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாமகவின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு அன்புமணி கைப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாசை அன்புமணி அவமதித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாமக தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு அன்புமணி வேறு இடத்திற்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. மேலும் மைக்கை அன்புமணி தூக்கி எறிந்தது, தனி அலுவலகம் தொடங்கியது பாமகவை பிளவுபடுத்தும் செயல் என்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு தரப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது! அன்புமணி இடத்தில் ஸ்ரீகாந்தி... ராமதாஸ் பொதுக்குழுவில் பரபரப்பு