பாஜகவிற்கு பயங்கர ஷாக் கொடுத்த அதிமுக... ஆண்டிப்பட்டி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
போஸ்டர்களில் தமிழகத்தில் மக்கள் புரட்சி அதுவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி என்ற வாசகமும், தமிழக மக்களை காப்போம் தமிழக உரிமை மீட்போம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி நடக்கும் என குறிக்கும் வகையில் ஆண்டிப்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி பேசுபொருளாகியுள்ளது , அந்த சுவரொட்டியில் தமிழகத்தில் மக்கள் புரட்சி அதுவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி என்ற வாசகமும், தமிழக மக்களை காப்போம் தமிழக உரிமை மீட்போம் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது
தமிழ்நாட்டில் அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என அறிவித்துள்ளார்
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெறும் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எந்த பெண்குட்டிகளே ரெடியோ..!! களைகட்டப்போகும் ஓணம் பண்டிகை.. கேரள அரசின் இலவச தொகுப்பு அறிவிப்பு..!!
ஒரே கூட்டணியில் அதிமுக பாஜக இடையே தனித்தனி கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், ஆண்டிப்பட்டியில் அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டி அரசியல் களத்தில் பேசு பொருளாகி உள்ளது. இந்த சுவரொட்டியில் தமிழகத்தில் மக்கள் புரட்சி அதுவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி என்ற வாசகமும், தமிழக மக்களை காப்போம் தமிழக உரிமை மீட்போம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது
இதையும் படிங்க: அநாகரீகப் பேச்சால் அம்பலப்பட்ட பழனிச்சாமி.. முதல்ல பாலபாடம் படிங்க! திமுக விமர்சனம்..!