×
 

ஊடகங்களை முடக்கும் திமுக அரசு… சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்குது! விளாசிய அண்ணாமலை…!

கரூர் சம்பவத்தில் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய செய்தி தொலைக்காட்சியை திமுக அரசு முடக்கி இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய தொலைக்காட்சி ஒன்றை முடக்கி இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். 

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு என்றும் ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் தெரிவித்தார். அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே என்றும் மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: எந்த நிலையில் இருக்கு? மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்...!

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது., முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர் என்ன சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன., அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன., இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: கரூர் வதந்தி... யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது... வேட்டையை தொடரும் போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share