எந்த நிலையில் இருக்கு? மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்...!
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை, கடல்கரை நகரமாக இருப்பதால், தாழ்வான நிலப்பகுதி மற்றும் புயல் காற்றுகளின் தாக்கத்தால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ள நீருக்கு ஆளாகிறது. 2015-ஆம் ஆண்டு வெள்ளம் போன்ற பேரழிவுகளுக்குப் பின், மழைநீர் வடிகால் அமைப்புகள் சென்னையின் உள்கட்டமைப்பின் முக்கிய பகுதியாக மாறியுள்ளன.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் தலைமையில், மத்திய அரசின் JNNURM , ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன், ஆயிரக்கணக்கான கி.மீ. நீளமுள்ள வடிகால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2025-ஆம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, இந்தப் பணிகள் நகரத்தின் வெள்ளத் தடுப்புக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால் சில சவால்களும் இன்னும் உள்ளன. 3,000 கி.மீ.க்கும் மேல் வலையமைப்பு, 1,000 கி.மீ. புதிய கட்டுமானங்கள், மற்றும் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் ஆகியவை, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் வதந்தி... யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது... வேட்டையை தொடரும் போலீஸ்...!
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர், விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!