நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.888 கோடி ஊழல்? அம்பலப்படுத்திய ED... அண்ணாமலை கடும் விமர்சனம்...!
அமலாக்கத்துறை மற்றொரு மிகப் பெரிய ஊழலை அடிக்கோடிட்டு காட்டி இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் 2,538 பதவிகளை உள்ளடக்கிய பண மோசடி நடந்துள்ளதாகவும் ஒரு பதவிக்கு 35 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டு இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்களுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை முன்வைத்தார்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் நபர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்க முடியாததால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறினார். திமுக அரசு அதன் தீராத பேராசையின் சுமையில் அவர்களின் கனவுகளையும் ஆசைகளையும் நசுக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.
இதனிடையே, 888 கோடி ரூபாய் ஊழல் பற்றிய இந்த சமீபத்திய அமலாக்கத்துறையின் தகவல் முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாகத்தின் அடையாளமாக மாறிய ஊழலின் ஒரு பகுதி என்று தெரிவித்தார். இதில் கசப்பான விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதலமைச்சர் ஸ்டாலினே வழங்கினார் என்பதுதான் என்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கொண்டாடும் புகைப்படங்களுக்கு அவர் போஸ் கொடுத்திருந்தார் என்றும் கூறினார். உண்மை என்னவென்றால் இந்த பதவிகள் ஹவாலா நெட்வொர்க்கள் சம்பந்தப்பட்ட ஒரு விரிவான ஊழல் நெட்வொர்க் மூலம் விற்கப்பட்டதாகவும் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதையும் படிங்க: ஓட்டு தான் முக்கியம்ல... மக்களுக்கு உதவி பண்ணாம 3000 பேரை கூட்டி கூட்டம்!.. நியாயமா முதல்வரே? விளாசிய தமிழசை...!
இந்த ஊழலானது அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது ட்ரு வேல்யூ ஹோம்ஸ் குழு சம்பந்தப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை என்பது வெளிப்பட்டதாகவும் திமுக அரசின் கீழ் நடந்த மிகப்பெரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படுவது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது நிர்வாகத்திடம் இருந்து உடனடி பொறுப்புணர்வை கோருவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ADMK வை அமித்ஷாவிடம் சரண்டர் செய்த EPS... தப்பு கணக்கு போடுது பாஜக..! முதல்வர் விமர்சனம்...!