×
 

"கொண்டாட்டம் போதும்... நிர்வாகத்தை பாருங்க"..! அண்ணாமலை அதிரடி தாக்கு..!!

தமிழக வெற்றி கழகம் கொண்டாட்ட மனநிலையில் இருந்து வெளிவரவில்லை என அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளார். போதைப் பொருள் கடத்துபவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மற்றும் கொலைகாரர்கள் மாநிலத்தில் சுதந்திரமாக நடமாடுவதாகவும், ஆட்சியைப் பிடித்த கொண்டாட்ட மனநிலையில் இருந்து தமிழக வெற்றிக் கழக அரசு இன்னும் மீளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 “போதைப் பொருள் கடத்துபவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், கொலைகாரர்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியைப் பிடித்த கொண்டாட்ட மனநிலையில் இருந்து த.வெ.க அரசு தற்போது வரை மீண்டுவரவில்லை என்றார். தமிழ்நாடு உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து த.வெ.க அரசு செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கருத்து, த.வெ.க அரசு பதவியேற்று சுமார் இரு வாரங்கள் ஆன நிலையில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறுமி படுகொலை, 17 வயது சிறுவன் கொலை உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகளுக்கு உடனடி நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: "ரவுடிகளுக்கு பதவி"...! இன்னும் எத்தனை காவு கொடுக்கணும்..? முதல்வர் விஜயை சாடிய நயினார்..!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது, போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை த.வெ.க அரசின் முன்னுரிமைப் பணிகளாக மாற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது

இதையும் படிங்க: இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share