×
 

ஏன் இவ்வளவு தாமதம்.? பொறுப்புக் கூறல் எங்கே.? வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்... அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.

மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு காலதாமதமாக பேச்சுவார்த்தைக்கு முன் வந்திருக்கிறது என்று வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கடந்த பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் மாணவர் சேர்க்கையில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவந்ததாலும், பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எனும் தங்கள் கனவை நனவாக்க உண்மையான வாய்ப்பை வழங்கியதாலும், நீட் தேர்வை நான் தனிப்பட்ட முறையில் ஆதரித்து வந்து இருப்பதாக கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலை தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது என்றும் சீரான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியுற்ற நிலையில், மீண்டும் ஒருமுறை தேர்வு நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இது எத்தகைய மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள் அண்ணாமலை குறிப்பிட்டார். இருப்பினும், இதற்குக் காரணமானவர்களிடம் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை என்றும் மாணவர்களின் மனதில் ஏற்பட்ட அந்த மாற்றமும், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு அவர்களைத் தள்ளியதும் அந்தத் தருணம்தான் என்று நான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், இங்கே எழும் முக்கியமான கேள்வி இதுதான் என்று கூறிய அண்ணாமலை, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? என சரமாரி கேள்விகளை முன்வைத்தார். மாணவர்களுக்கும், அவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது.

இதையும் படிங்க: ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, சுயநல நோக்கங்களைக் கொண்டவர்கள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பகாலக் கோரிக்கைகளுக்குத் தொடர்பில்லாத கருத்துகளை முன்வைப்பதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தைத் திசைதிருப்ப முயல்வதோ இயல்பான ஒன்றுதான் என்றார். அத்தகைய சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்க நீங்கள் மௌனம் காத்தால், உங்கள் முக்கிய நோக்கங்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம் என்றும் தயவுசெய்து அப்படி நடக்க அனுமதிக்காதீர்கள்., பாஜக தலைமையிலான மத்திய அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், நிலவும் கவலைகளுக்குத் தீர்வு காண விரைவான மற்றும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: வீ த லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு..! அதிரும் சென்னை... அதிரடி காட்டும் அண்ணாமலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share