×
 

#BREAKING: "CBI விசாரிக்கட்டும்"..! ஆம்ஸ்ட்ராங் Case-ல் Shock Move..! அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் தனது இல்லத்துக்கு அருகில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். உணவு டெலிவரி ஏஜெண்டுகள் போல் வந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் ஒரு தலித் தலைவராக அறியப்பட்டதால், இந்தக் கொலைக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தன. 

தமிழ்நாடு போலீசார் இந்த வழக்கை விசாரித்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, 7,411 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதில் 30 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், போலீஸ் விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும், அரசியல் தொடர்புகள் முழுமையாக ஆராயப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

2025 செப்டம்பர் 24 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், போலீஸ் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கின் விசாரணையை மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு (சிபிஐ)க்கு மாற்ற உத்தரவிட்டார். விசாரணையில் நடைமுறை குறைபாடுகள் மற்றும் குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் கருதியது. இந்த உத்தரவு தமிழ்நாடு அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு இடைநிலை மனு தாக்கல் செய்தது. 

இதையும் படிங்க: "பல ஆண்டுகள் போலீசுக்கு டிமிக்கி..! ரவுடி கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சரணடைந்த சரித்திர பதிவேடு குற்றவாளி..!!

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசு இடையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது. 

இதையும் படிங்க: இனி யாராவது லஞ்சம் கேட்டா.. ஒரு வாட்ஸ்அப் போதும்..!! புதிய புகார் வசதி அறிமுகம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share