×
 

அதிகார திமிரா? தோல்வி பயமா?.. நாங்கள் விதை..! TVK அருண்ராஜ் காட்டம்..!

முறையாக அனுமதி பெற்று வைக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் பேனர்களை அகற்றுவது அதிகார துஷ்பிரயோகம் என அருண்ராஜ் தெரிவித்தார்.

திமுக அரசு தமிழக வெற்றி கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அடிக்கடி கட்சி என குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்காதது, முறையான பாதுகாப்பு வழங்குவதில்லை என எண்ணற்ற குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பதாகைகளை போலீசார் அகற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு வைக்கப்பட்ட பதாகைகளை எதற்காக அகற்றினார்கள் என்று கேட்டால் போலீசாரிடமிருந்து முறையான பதில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குழு செயலாளர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத் திமிரா அல்லது தோல்வி பயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செங்கோட்டில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பேனர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.  தகவல் அறிந்ததும் நேரில் சென்று அதனை தடுத்து நிறுத்தியதாகவும் எந்த விதியின் அடிப்படையில் அகற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு காவல்துறையிடம் இருந்து முறையான பதில் இல்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் களம்..! அருண் ராஜ் தலைமையில் TVK தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம்..!

காரணமே இல்லாமல் எங்கள் பதாகைகளை அகற்றுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் குற்றம் சாட்டினார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அருண்ராஜ் காட்டமாக தெரிவித்தார். எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம் என்றும் நாங்கள் விதை., புதைக்க நினைத்தால் முளைப்போம் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: விசில் சத்தம் காது கிழியுது..! இடையூறு செய்யும் தவெக-வினர்... பொதுமக்கள் குமுறல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share