சாம்பல் புதன்: 40 நாள் தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்துவர்கள்... வேளாங்கண்ணியில் கோலாகலம்...!
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் சாம்பல் புதலுடன் துவங்கிய தவக்காலம். இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு உள்ள காலம் தவக்காலமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது இயேசு பிரான் பாடுபட்ட துவக்க நாளான இன்று சாம்பல் புதன் என்றும் அழைக்கப்படுகிறது இந்த தவக்காலம் இன்று துவங்கியது. இந்த காலங்களில் கிறிஸ்தவ மக்கள் உலக மக்களுக்காக இயேசு ஆற்றிய பாடுகளை உணர்ந்து 40 நாட்கள் நோன்பு இருப்பர் இந்த காலங்களில் கிறிஸ்தவர்கள் அறம் மற்றும் தர்மம் செய்வதிலும் நோன்பு இருப்பதிலும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர்
இத்தகைய சாம்பல் புதன் இன்று துவங்கியதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருப்பலிக்கு பின் கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமாக பூசப்பட்டது. இதேபோன்று தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: அட்டகத்தி...! தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு..! அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி..!
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது. இதையொட்டி உலகப் புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாபேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்று வருகிறது. வழக்கமாக நெற்றியில் சாம்பல் பூசபட்டு 40 நாள் தவக்காலத்தை தொடங்கி உள்ளனர்.
அதேபோல், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துரை குடியிருப்பு ஜெபமாலை அன்னை திருத்தலத்தில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குறுத்தோலைகளை சேமித்து அதனை எரித்து சாம்பல் ஆக்கப்பட்டது. அந்த சாம்பலை பங்கு தந்தை ஜெரால்ட் ரவி புனிதம் செய்து திருப்பலியில் பக்தர்களுக்கு சாம்பலை நெற்றியில் பூசினார். இந்த திருப்பலியில் பங்கு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையின் முக்கிய தொகுதிக்கு குறி... அறிவாலய அஸ்திவாரத்தை அசைக்க பார்க்கும் கூட்டணி கட்சி... திமுகவுக்கு அடுத்த ஷாக்...!