×
 

மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

சட்டசபையில் நிகழும் சச்சரவுகளை சுட்டிக்காட்டி சபாநாயகர் பிரபாகர் வருத்தம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற அமர்வின்போது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தவெக உறுப்பினர் ஒருவர் திமுகவை விமர்சித்து சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பு உறுப்பினர்களும் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து உரத்த குரலில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். சிலர் முன்னால் வந்து கையை நீட்டிக் கொண்டு ஓடிவரும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.இந்தக் காட்சியைக் கண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். “மக்கள் என்ன நினைப்பார்கள்?” என்று கேட்ட அவர், “எல்லை தாண்டி தாவி குதிப்பதும், கையை நீட்டிக் கொண்டு ஓடிவருவதும் என வருத்தம் தரும் வகையில் செயல்படுகிறீர்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “யாரையும் பேரவையை விட்டு வெளியேற்றும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் கட்டுப்பாடு இன்றி நடந்து கொள்கிறீர்கள். அவை மாண்பைக் கட்டிக்காக்கும் பொறுப்பு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருவருக்கும் உள்ளது. சபை நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்?” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

சபாநாயகர் தனது கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்திய பிறகு இரு தரப்பு உறுப்பினர்களையும் அமைதிப்படுத்த முயன்றார். அவை நடவடிக்கைகள் மீண்டும் ஒழுங்காக நடைபெறும் வகையில் அவர் வழிநடத்தினார். இந்தச் சம்பவம் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் மரபுகளையும் பாதுகாப்பதில் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் உணர்த்தியதாக அமைந்தது.

 

இதையும் படிங்க: எதிர்க்கட்சியினரை ஆத்திரமூட்டும் அமைச்சர்கள்..! முதல்வர் ரசிப்பது மகா கேவலம்..! ஐ.லியோனி கண்டனம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share