திமுகவின் மாடித் தோட்டம்... தவெகவின் பூந்தோட்டம்..! பெயர் மாற்றத்தை விமர்சித்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்..!!
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சட்டசபையில் உரையாற்றினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் தொடங்கிய இந்த நாளின் அலுவல்களில் முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் உரையாற்றினார்.
அப்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கலைஞர் கருணாநிதி இருப்பார் என்று கூறினார். திமுகவின் திட்டங்கள் அனைத்திலும் மு. க ஸ்டாலின் இருப்பார் என்றும் கூறினார். பட்ஜெட்டில் தேடிப் பார்க்கிறேன் இருப்பது போன்று உள்ளது ஆனால் கண்ணுக்கு புலப்படவில்லை என்று விமர்சித்தார். திமுகவின் திட்டங்கள் அத்தனையையும் தமிழக வெற்றி கழகம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
நுண்ணீர் பாசன திட்டம் துளித்துளி நீர் பாசனம் என மாறியுள்ளது என்று விமர்சித்துள்ளார். பனை மேம்பாட்டு இயக்கம் பனை பாதுகாப்பு இயக்கமாக மாறி உள்ளது என்றார். நுண்ணீர் பாசனத்திற்கு திமுக ஒதுக்கிய நிதியை விட தமிழக வெற்றிக்கழக அரசு குறைவாக ஒதுக்கி உள்ளதாக குற்றம் சாட்டினார். பட்ஜெட்டில் பெயர் மாற்றம் மட்டும்தான் இருக்கிறது என்றார். திமுக ஆட்சியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் லாபமா? சாமை, தினை சாகுபடி இரட்டிப்பு இலக்கு..! அதிரடி அறிவிப்புகள்..!!
திமுகவின் மாடித்தோட்டம் தமிழக வெற்றி கழகத்தின் பூந்தோட்டம் ஆகியுள்ளது என்றும் திமுகவின் அழைக்கப்படும் தமிழக வெற்றி கழகத்தின் பட்டர் ஃப்ரூட் ஆகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கடன் வாங்கி வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை என்றும் மக்கள் திட்டங்களுக்கு செலவிட்டோம் எனவும் கூறியுள்ளார். வாங்கப்பட்ட கடன் மூலதன செலவுக்கு ஏடுகளின் கல்விக்காகவும் பயன்படுத்தப்பட்டது என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!