×
 

விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் லாபமா? சாமை, தினை சாகுபடி இரட்டிப்பு இலக்கு..! அதிரடி அறிவிப்புகள்..!!

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அதையொட்டி இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர் சாகுபடி இரு மடங்காக்க தமிழ்நாடு குரு தானிய இயக்கத்திற்கு 7.61 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நிரந்தர பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக 17.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இழப்புகளை தடுக்க 7.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்திற்காக 56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

மழை வெயிலில் இருந்து விலை பொருட்களை பாதுகாக்க 43 ஆயிரத்து 500 தார்பாய்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் ரூபாய் முதல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share