FCRA, நீட், தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானங்கள்..! முதல்வருக்கு நன்றி... பேரவையில் பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!!
சட்டப்பேரவையில் தேமுதிக போது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.
சட்டசபையில் இன்று முக்கியமான ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதாவாக அழைக்கப்படும் FCRA மசோதாவுக்கு எதிராக அமைச்சர் ராஜ்மோகன் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த நடவடிக்கை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த மசோதாவின் தற்போதைய வடிவத்தைக் கடுமையாக எதிர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்த மசோதாவில் உள்ள சில முக்கிய பிரிவுகள், தொண்டு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கக்கூடும் என்ற கவலை தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் அதே வேளையில், சட்டப்பூர்வமாக இயங்கும் நிறுவனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.
FCRA மசோதாவுக்கு எதிர்ப்பு தீர்மானத்தின் மீது பிரேமலதா விஜயகாந்த் உரை நிகழ்த்தினார். இன்று இரண்டு முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!
மனிதநேயத்துடன் கோரிக்கையை ஏற்று கேமராமேன்களுக்கு சற்று ஓய்வு தந்தமைக்கும் தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தமிழ் தாய் வாழ்த்து குறித்து நேற்றைய இயக்கப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் தமிழ்மொழி மட்டுமே பேசினார் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "வறண்டு கிடக்குது காவிரி... ஜோக்கர் கூட்டமான அமைச்சரவை"..! உதயநிதி கடும் குற்றச்சாட்டு..!!