×
 

அமைச்சர் ராஜ்மோகன் வரலாறு எங்களுக்கு தெரியும்..! முதல்வர் பதில் சொல்லட்டும்..!! பேரவையில் உதயநிதி அதிரடி..!!

சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகனை விமர்சனம் செய்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக்கழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று தெரிவித்தார்.

யாரும் ஓடிப்போகாதீர்கள் என கூறிவிட்டு அவர் எழுந்து சென்று விட்டார் என்று கூறினார். திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் அதிகரித்தது ஏன் என உதயநிதி விளக்கம் கொடுத்தார். அமைச்சர் ராஜ்மோகன் வரலாறு பற்றி தங்களுக்கு தெரியும் என்றார். திமுக மேடையில் தங்களது புகழ்ந்து பேசியவர் என்று கூறினார். முதல்வர் தயாராக இருப்பதாக சபாநாயகரான நீங்கள் தானே கூறினீர்கள். அப்படி என்றால் அவர் பதில் கூறட்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தாய்மாமன் காது கொடுத்து திட்டம்"..! வாக்குறுதி என்னாச்சு..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!

சட்டத்திற்கு உட்பட்டு தான் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு டிஜிபி நியமித்தார் என்றும் டிஜிபி நியமனத்தில் யூபிஎஸ்சிக்கும் அன்றைய திமுக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது என்றும் கூறினார். காவல்துறைக்கு யார் பொறுப்போ அவர்கள் பதில் சொல்லவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு திங்கட்கிழமை முதல்வர் விஜய் பதிலளிப்பார் என்று பேரவை தலைவர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share