×
 

திருவண்ணாமலை கோவிலில் பாஜக பிரமுகர் அண்ணாமலை சாமி தரிசனம்... மனமுருகி வழிபாடு..!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாஜக நிர்வாகி அண்ணாமலை சாமி தரிசனம் செய்து உள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புனிதமான சிவாலயம். இது சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு சிவபெருமான் அண்ணாமலையார் என்ற திருப்பெயருடன் வணங்கப்படுகிறார். அம்மன் உண்ணாமுலையம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தக் கோவில் தமிழகத்தின் மிகப் பழமையான மற்றும் பிரமாண்டமான சிவன் கோவில்களில் ஒன்றாகும். இதன் பின்னணியில் உள்ள அண்ணாமலை மலையே சிவபெருமானின் சொரூபமாகக் கருதப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் மலையின் அருளால் தங்களின் உள்ளார்ந்த ஒளியை உணர்கின்றனர். நெருப்பின் தீயால் அக்னி தலமாக இருந்தாலும், இங்கு பக்தியின் ஒளி எல்லா இருளையும் விரட்டுகிறது என நம்புகின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்பட நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

அந்த வகையில் இன்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது மனைவியுடன் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது

.

இதையும் படிங்க: மாப்ள அவர்தான்.. ஆனா..! அமித் ஷா கணக்கு... டம்மி EPS... அமைச்சர் பெரியசாமி விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share