×
 

நீட் தேர்வு மையத்தில் பாஜக நிகழ்ச்சி... ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதம்...!

 மதுரை வளையங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர்.

 மதுரை வலையங்குளம் தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் இதே கல்லூரியில் அரசியல் கட்சி நிகழ்ச்சியில் நடைபெறுவதால் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதம் 


 மதுரை வளையங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். இதே தனியார் கல்லூரியில் பாஜக தென் தமிழக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார் .
 

நீட் தேர்வு நடைபெறும் மையத்தில் பெற்றோர்கள் மற்றும் உடன் வருவல் கூட அனுமதிக்காமல் மையா வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்படுவார்கள் இந்நிலையில் அதே மையத்தில் தென் தமிழக பாஜக வேட்பாளர்கள் மற்றும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றதால் அதிர்ச்சி அடைந்த நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர் 

இதையும் படிங்க: என்ன STUDENTS ரெடியா..? நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

கல்லூரி வளாகத்துக்குள் ஏராளமான வாகனங்கள் ஆரன் அடித்துக்கொண்டே உள்ளே வருவதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு. ஒரே நேரத்தில் தேர்வு மையம் மற்றும் கட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டி, கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர் பியூஸ் கோயல்  நிகழ்ச்சியை முடித்து புறப்பட்டுச் சென்றார்.  மேலும் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களும் தேர்வு முடித்து வெளியில் வந்ததால் பெற்றோர்கள் கல்லூரி விவாதத்தில் வாக்குவாதம் செய்து புறப்பட்டு சென்றனர் .

இதையும் படிங்க: NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share