×
 

காங்கிரஸின் சரித்திரமே துரோகம் தான்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜய்யின் முதுகில் குத்தவும் தயங்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு குறித்துப் பாஜக மூத்த தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையான அரசியல் விமர்சன முன்வைத்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸின் கடந்த காலச் சரித்திரத்தைச் சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ள கருத்துக்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக அரசுக்குக் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் சூழல் குறித்துத் தமிழிசை சௌந்தரராஜன் காரசாரமாக விமரிசித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது. கடந்த காலங்களில் தங்களின் சுயலாபத்திற்காகத் திமுகவின் முதுகிலேயே குத்திய பாரம்பரியம் கொண்டதுதான் காங்கிரஸ் கட்சி. அதே காங்கிரஸ், தற்போதைய புதிய முதலமைச்சர் விஜயின் முதுகிலும் சமயம் பார்த்துத் துரோகம் செய்யத் தயங்காது; ஏனென்றால், காங்கிரஸின் ஒட்டுமொத்த சரித்திரமே அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. கூட்டணி என்ற பெயரில் தவெக அரசைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் காங்கிரஸ் முயல்வதாகவும், இது புதிய அரசுக்கு நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: முதுகில் குத்திய காங்கிரஸ்..!! திமுக இளைஞரணி கூட்டத்தில் ஒலித்த 'காங்கிரஸ் ஒழிக' கோஷம்..!!

முன்னதாக, தவெகவின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசிய எதிர்க்கட்சியினர், முள்ளிவாய்க்கால் நினைவு முத்தமிழ் முழக்கம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுப்பூர்வமான விஷயங்களைப் பேசிவிட்டு, அதே துயரத்திற்குக் காரணமான காங்கிரஸை நம்பித்தான் விஜய் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார் என்ற முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி விமர்சித்து வந்தனர். அதனை வழிமொழியும் விதமாகவே, தமிழிசை சௌந்தரராஜனும் காங்கிரஸின் கடந்த கால அரசியல் நகர்வுகளைத் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் புதிய அரசின் உத்திகளையும் அதன் கூட்டணிக் கட்டமைப்பையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தற்போதைய அரசை ஐந்து கட்சிகளின் ஆதரவில் ஓடும் 'பொய்க்கால் குதிரை ஆட்சி' என்று சாடியிருந்தார். தற்போது பாஜாக தரப்பிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன், கூட்டணிக் கட்சிகளால் எப்போது வேண்டுமானாலும் இந்த அரசுக்கு முட்டுக்கட்டை அல்லது பின்னடைவு ஏற்படலாம் என்ற ரீதியில் 'முதுகில் குத்தும் காங்கிரஸ் சரித்திரம்' என்ற கடுமையான அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share