தமிழகத்தை சீரழிக்கும் போதை மாஃபியாக்கள்… செயலிழந்த திமுக…! பாஜக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக கூறி பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறை தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுபவை. ஆனால், இந்தப் பறிமுதல்கள் அதிகரித்தாலும், தெருவெல்லாம் கஞ்சா எளிதில் கிடைப்பதாக மக்கள் புலம்புகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட இதில் சிக்குவது அதிகரித்துள்ளது. சென்னையில் அரசுப் பள்ளி மாணவன் ஒருவனிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் போன்றவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.எதிர்க்கட்சித் தலைவர்கள் இதை வெறும் சட்டம்-ஒழுங்கு தோல்வியாக மட்டும் பார்க்கவில்லை. அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் அண்ணாமலை உள்ளிட்டோர் தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் மாஃபியா தலைவிரித்தாடுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் திறனற்ற திமுக அரசை கண்டித்து பாஜக இளைஞர் அணியின் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது என்றும் இளைஞர்களை அழிக்கும் போதைப்பொருள் கும்பல்களை தடுக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெற்றுப் பெருமை பத்திரம்..! ஏமாற்றம் என்ன புதுசா.. பழகிப்போச்சு..! விளாசிய நயினார்..!!
போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கொள்கைகள் ஆகியவற்றை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பாக வருகின்ற 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒப்புக்கு சப்பாணி..! ஒரு USE- ம் இல்ல... பட்ஜெட்டை பந்தாடிய அண்ணாமலை..!