×
 

வெற்றுப் பெருமை பத்திரம்..! ஏமாற்றம் என்ன புதுசா.. பழகிப்போச்சு..! விளாசிய நயினார்..!!

மக்களுக்கு ஏமாற்றம் புதிதல்ல என இடைக்காலம் பட்ஜெட்டை சுட்டிக்காட்டி நைனார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசு இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை ஈர்க்கும் வகையில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும், இது வெறும் பெருமை பத்திரம் அல்லது ஏமாற்று முயற்சி என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இந்த இடைக்கால பட்ஜெட்டை "சொத்தையான அத்திப்பழம்" என்று கடுமையாக சாடினார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அரசு மக்களை திராவிட மாடல் என்ற பெயரில் ஏமாற்றி வந்ததாகவும், கடைசி பட்ஜெட்டிலும் அதே போக்கைத் தொடர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். புதிய திட்டங்கள் அல்லது மக்கள் நலனுக்கான உருப்படியான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாமல், வெறும் வார்த்தை ஜாலங்களால் நிரம்பிய அறிக்கை இது என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் 'மாபெரும் காதுகுத்தும் விழா' அழைப்பிதழை வழங்கியதன் மூலம், அரசு மக்களின் காதுகளில் விழுந்து கொண்டிருக்கும் பொய்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதை இன்னும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்து வந்த திமுக அரசு, கடைசி பட்ஜெட்டிலும் பொய்களை மட்டுமே பேசியுள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஒப்புக்கு சப்பாணி..! ஒரு USE- ம் இல்ல... பட்ஜெட்டை பந்தாடிய அண்ணாமலை..!

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், நிதியமைச்சர் வெறும் பொய்களால் நிரம்பிய உரையை அளித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டது திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் அல்ல, வெற்றுப் பெருமை பத்திரம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஐந்தாண்டுகளாக ஏமாற்றத்திற்குப் பழகிய மக்களுக்கு இந்த ஏமாற்றமும் புதிதில்லை என்றும் கூறினார். மேலும், மாற்றமும் தொலைவிலில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: வருந்துகிறேன்..! த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு..! வருத்தம் தெரிவித்த நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share