×
 
☰

“திமுகவுக்கு சளைத்தது இல்லை தவெக”..! வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதை..! வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

திமுகவையும் தவெகவையும் ஒப்பிட்டு வானதி சேனை வாசன் விமர்சனம் செய்துள்ளார்.

சேலத்தில் கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் சன்னரக அரிசி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலவச ரேஷன் அரிசியையே மீண்டும் விற்பனை செய்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.விண்ணை முட்டும் விலைவாசியும் உயரும் அரிசி விலையும் சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் வேளையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக இந்த சம்பவம் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

சேலத்தில் கூட்டுறவு அங்காடிகளில் குறைவான விலையில் அரிசி வழங்குவதாகக் கூறி இலவச ரேஷன் அரிசியையே மீண்டும் கொடுத்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.திமுக ஆட்சிக்கு நாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் உள்ளது இந்த தவெக அரசின் செயல்பாடுகள் என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். அரிசி விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ள நிலையில், அரசு அறிவித்த குறைந்த விலை அரிசித் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில் சன்னரக அரிசி விற்பனை தொடங்கப்பட்டபோது, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் வழங்கப்பட்ட அரிசியின் தரம் ரேஷன் அரிசியைப் போலவே இருப்பதாக வாங்குபவர்கள் புகார் தெரிவித்தனர். ஒரு நபருக்கு ஐந்து கிலோ அளவிலேயே வழங்கப்பட்ட நிலையில், தரமற்ற அரிசி கிடைத்ததால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அமுதம் கடைகள் மூலம் கிலோ ரூபாய் 30க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் சேலத்தில் நடைபெற்ற இந்த விற்பனையில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியையே சன்னரக அரிசி என்று பெயர் மாற்றி விற்பனை செய்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறாரா? வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

இதனால் அரசின் நோக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.வானதி சீனிவாசன் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண முடியாத அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த குறைந்த விலை அரிசித் திட்டத்தில் இத்தகைய முறைகேடு நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்தார். அரசு உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share