×
 

பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்  தொகுதிப் பங்கீடு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி அறிவிப்பு.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய பட்ஜெட் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துத் தனது கருத்துகளைத் திட்டவட்டமாகப் பதிவு செய்தார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய அவர், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே அமையும் என உறுதிபடத் தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 மத்திய பட்ஜெட் குறித்து வைகோ கூறியது, இந்த பட்ஜெட் ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் அளிக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்கும் என எதிர்பார்த்தோம்; ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலர்களாகக் குறைந்த போதிலும், அதன் பலனை மக்களுக்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது சாமானியர்கள் மீதானச் சுமையைக் குறைக்க அரசு விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது எனச் சாடினார்.

இதையும் படிங்க: திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்; ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர்! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முழக்கம்!

11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக அறிவித்துவிட்டு, 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. இது நாட்டின் பொருளாதார எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி அல்ல என்றார். கோவை, ஈரோடு மண்டலத்தின் முதுகெலும்பாக உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்கு எந்தவிதச் சிறப்புத் திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
பட்ஜெட்டில் சுங்க வரியை குறைத்திருப்பதை மட்டும் மதிமுக சார்பில் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் 2026: திமுக-வே மீண்டும் வெல்லும்!
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்; மு.க. ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார். தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும். அதன் பின்னரே சீட்டுப் பங்கீடு (Seat Sharing) தொடர்பான இறுதிக்கட்ட அறிவிப்புகள் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு தலைகுனியாது!  234 தொகுதிகளிலும் திமுகவின் அதிரடி பரப்புரை இன்று தொடக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share