×
 

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

டெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 53வது கூட்டம் தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாக காவிரி பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிகவும் பலவீனமாக இருந்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி மற்றும் ஹரங்கி ஆகியவற்றில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாகத் திறக்குமாறு தமிழ்நாடு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

காவிரி நதியின் மேல் பகுதியான கர்நாடகா இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தேவையான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்காததால் மேட்டூர் அணையில் போதிய நீர் வரத்து இல்லை. இதனால் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சம்பா சாகுபடிக்காவது நீர் கிடைக்குமா என்பது குறித்த கவலை அவர்களிடையே நிலவுகிறது.

இதையும் படிங்க: போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!

கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பு, ஜூன்-ஜூலை மாதங்களுக்கான நிலுவை நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீர் பங்கீட்டை கர்நாடகா கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. கர்நாடகா தரப்போ, தாமதமான மழை மற்றும் குறைந்த நீர் வரத்து காரணமாக நீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், எனவே தற்போது நீர் திறப்பது கடினம் என்றும் வாதிட்டது. முந்தைய 52வது கூட்டத்தில் நீர் வெளியீட்டு முடிவை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைத்திருந்த நிலையில், இந்த 53வது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: டெல்லியைப் பிளக்கும் போராட்டம்..! களமிறங்கிய காங்கிரஸ்... 5 முக்கிய கோரிக்கைகள்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share