×
 

காலையிலேயே படுபயங்கரம்... வாயில் துணியை திணித்து சிறுமியை சீரழித்த 2 மிருகங்கள்...!

செங்கல்பட்டில் 7ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயதுடைய 7ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காலை, இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் சென்ற மாணவியை, மகேஸ்வரன் (20) மற்றும் அஜய் (27) என்ற இரு இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களில் மகேஸ்வரன் ஒரு தனியார் கல்லூரி மாணவர் ஆவார்.

மாணவியின் வாயில் துணியை திணித்து, கை மற்றும் கால்களை பிடித்து, அருகிலிருந்த வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்ற இருவரும் அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய காமுகனுக்கு தர்ம அடி...!

இந்நிலையில், இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தனது மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த தந்தை, அவரை தேடிச் சென்றுள்ளார். அப்போது மாணவி இருந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதுகுறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மகேஸ்வரன் மற்றும் அஜய் ஆகியோர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் கல்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share