பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய காமுகனுக்கு தர்ம அடி...!
பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு பட்டப் பகலில் பரபரப்பு
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் தப்பி ஓட்டம்- பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு பட்டப் பகலில் பரபரப்பு
திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்காக திண்டுக்கல்லுக்கு வருவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் திண்டுக்கல்லிற்கு வருகை தந்து பின்னர் தங்களது பள்ளிகளுக்குச் சென்றனர்.
இதையும் படிங்க: நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!
இந்நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்பொழுது பேருந்துக்காக காத்திருந்த மாணவியிடம் திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த ஸ்டீபன் என்ற வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை எடுத்து மாணவி கத்தவே ஸ்டீபன் அங்கிருந்து ஓடிள்ளார் இதனைப் பார்த்த பொதுமக்கள் ஸ்டிப்பனை விரட்டி சென்றனர். பின்னர் திருவள்ளூர் சாலையில் வைத்து மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஸ்டீபனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த காயம் அடைந்த ஸ்டீபனை முதலுதவி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதே போல் கடந்த 19ஆம் தேதி மதுரை பேருந்தில் வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பிடித்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் தர்மடி கொடுத்த சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட சிங்கப்படை போலீசார் இரண்டு பாலியல் சீண்டல் சம்பவம் நடைபெற்ற பொழுதும் விசாரணைக்கு கூட சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் பயங்கரம்... 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வாரத்தில் இத்தனை வழக்குகளா?