×
 

கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதை.. நொடியில் பறிபோன உயிர்.. பரங்கிமலையில் சோகம்..!

சென்னை பரங்கிமலை அருகே பாண்டிச்சேரி விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மார்க்கமாக பாண்டிச்சேரிக்கு மெமு ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலானது பரங்கிமலை ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் செல்போன் பேசியபடி சென்ற இரண்டு இளைஞர்கள் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு இளைனர்களும் பலத்த காயமடைந்தனர். மேலும் சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து மரணம் அடைந்தனர்.

பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் மாம்பலம் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பூஜை அறையில் இருந்து பற்றிய தீ.. கொளுந்து விட்டு எரிந்த பங்களா வீடு.. உடல்கருகி இறந்த முதிய தம்பதி..!

மேலும் மாம்பலம் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையின் போது ரயில் மோதி விபத்தில் இறந்தவர்கள் பெரம்பலூரைச் சேர்ந்த முகமது நஃபூல் (வயது 20), சபீர் அகமது (வயது 20) என்பது தெரியவந்தது. 

மேலும் இருவரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்துள்ளது. நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்று உள்ளனர். பின்னர் திரும்பி வந்தபோது ரயில்வே தண்டவாளத்தில் செல்போன் பேசியபடி வந்துள்ளனர். அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரயில் மோதி இந்த விபத்து ஆனது நடந்துள்ளது என தெரியவந்து உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து மாம்பலம் ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் முகமது நபில், சபீர் அகமது ஆகியோர் சென்னையில் தங்கி கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை மின்சார ரயிலில் பயணம் செய்ய பரங்கிமலை ரயில் நிலையம் வந்த நிலையில் இருவரும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிர் இழந்தனர். இதனையடுத்து மாணவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரயில் மோதி ஒரே ஊரை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: கொலை முயற்சி? மதுரை ஆதினம் அளித்த புகார்.. சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share