சென்னை மக்களே... ஆரஞ்சு அலர்ட் வந்தாச்சு..! கனமழை தொடரும் என எச்சரிக்கை...!
சென்னையில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டது.
கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. ஏரிகளில் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருவதால் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
இதையும் படிங்க: சென்னை வாசிகளே… HIGH ALERT.! சூறையாட போகுது மழை… ரொம்ப உஷாரு…!
முக்கிய சாலைகள், தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதனிடையே, சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை... அனாவசியமா வெளிய வராதீங்க மக்களே..!