×
 

சென்னை வாசிகளே… HIGH ALERT.! சூறையாட போகுது மழை… ரொம்ப உஷாரு…!

சென்னையில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். ஒவ்வொரு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

தலைநகர் சென்னையில் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21, 22, 24 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 23ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை... அனாவசியமா வெளிய வராதீங்க மக்களே..!

அக்டோபர் 23ஆம் தேதி சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் அக்டோபர் 24ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே... வெளுக்க போகுது மழை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share