×
 

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே... வெளுக்க போகுது மழை...!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு சாலட் கொடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு ஆழம் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #weatherupdate: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே...!

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 23ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்... தீபாவளி அன்று வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share