×
 

சென்னையில் அதிர்ச்சி... தாய், மகன் மர்மமான முறையில் கொலை... போலீசாருக்கு எழுந்த முக்கிய சந்தேகம்...!

பல் மருத்துவரும், அவரது தாயும் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்

சென்னை அண்ணாநகரில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 68 வயதான அஷ்ரப் நிஷா மற்றும் அவரது மகனும் பல் மருத்துவருமான அஷ்ரப் அகமது ஆகியோர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அஷ்ரப் நிஷாவின் மற்ற இரண்டு மகன்களையும் அண்ணாநகர் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் முதல் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், அஷ்ரப் நிஷா தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை விற்பனை செய்வது தொடர்பாக நீண்ட நாட்களாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு மற்றும் சொத்து தகராறு இருந்து வந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்... மூதாட்டி கழுத்தறுத்து கொடூர கொலை..! நாமக்கல்லை உலுக்கிய கோரச்சம்பவம்..!!

இந்த நிலையில், நேற்று இரவு அஷ்ரப் நிஷாவும், அவரது மகனும் பல் மருத்துவருமான அஷ்ரப் அகமதும் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இன்று காலை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களிலும் காயங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, இது கொலை சம்பவம் என்பதை உறுதி செய்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக சகோதரர்களே இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், உயிரிழந்த பல் மருத்துவர் அஷ்ரப் அகமதின் இரண்டு சகோதரர்களையும் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான அண்ணாநகரில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனைவி, மாமியாரை கொடூரமாக வெட்டி சரித்த அரக்கன்... சடலங்களைப் பார்த்து ஸ்டன் ஆன ராமநாதபுரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share