×
 

50 ஆண்டு காத்திருப்பு! சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பஸ் சேவை!! கட்டணம் காஸ்ட்லி!

சென்னையில் இன்று முதல் 'டபுள் டெக்கர்' சுற்றுலா பேருந்தின் சேவை துவக்குகிறது. இதில், பெரியவர்களுக்கு, 200 ரூபாய்; சிறியவர்களுக்கு 150 ரூபாய் கட்டணம், 'ஆட்டோவை விட காஸ்ட்லி' என்ற விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: தமிழக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் (இரட்டை அடுக்கு) சுற்றுலா பேருந்து சேவை இன்று (ஜனவரி 24) முதல் முழுமையாக இயக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜனவரி 12-ம் தேதி இந்த பேருந்தை தொடங்கி வைத்தார். 1.89 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இந்த மின்சார டபுள் டெக்கர் பேருந்து, சுற்றுலா பயணிகளுக்கு சென்னையின் பாரம்பரிய மற்றும் வரலாற்று சின்னங்களை உயரமான கோணத்தில் இருந்து ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த பேருந்து சேவை வாலாஜா சாலையில் உள்ள டிடிடிசி (TTDC) அலுவலகத்தில் இருந்து தொடங்கி, எல்.ஐ.சி கட்டிடம், ஸ்பென்சர் பிளாசா, பாடிகார்டு முனியப்பன் கோவில், தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, வானொலி நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை உள்ளடக்கி, ஓமந்தூரார் மருத்துவமனையில் முடிவடைகிறது. பேருந்தின் மேல் தளத்தில் திறந்த வெளி அமைப்பு இருப்பதால், சென்னையின் அழகான கட்டிடங்கள், கடற்கரை காற்று மற்றும் நகரக் காட்சிகளை சிறப்பாக பார்வையிடலாம்.

பயண கட்டணம் விவரம்: பெரியவர்களுக்கு 200 ரூபாய், குழந்தைகளுக்கு 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் வெளியானதும் சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஆட்டோவில் அதே தூரத்துக்கு 100-150 ரூபாய்க்கு செல்லலாம், ஆனால் இந்த டபுள் டெக்கர் பேருந்துக்கு 200 ரூபாயா? மிக அதிகம்!" என்ற கருத்துகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!! இன்னும் 2 நாளுக்கு கொட்டக் காத்திருக்கு மழை! வெதர் அப்டேட்!

மேலும், ஏற்கனவே இயங்கி வரும் 'சென்னை உலா' விண்டேஜ் பேருந்து சேவையில் 50 ரூபாய் கட்டணத்தில் 34 கி.மீ. தூரம் சுற்றலாம் என்பதால், புதிய டபுள் டெக்கர் கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் ஒப்பிடுகின்றனர். சிலர் "சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது போல் தெரிகிறது, உள்ளூர் மக்களுக்கு விலை உயர்ந்தது" என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இது மின்சார வகை டபுள் டெக்கர் பேருந்து என்பதால், பராமரிப்பு செலவு, சார்ஜிங் வசதிகள், ஏசி வசதி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிப்பதே முதன்மை நோக்கம்" என்று விளக்கினர். பேருந்தில் ஏசி, வைஃபை, சார்ஜிங் போர்ட்கள் போன்ற நவீன வசதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சேவை சென்னையின் சுற்றுலா துறையை புதுப்பொலிவுடன் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள், குறிப்பாக வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இது கவர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்படுமா என்பது காத்திருக்க வேண்டிய விஷயம்.

இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய அமெரிக்கா: சீனா மீதான அதிருப்தியால் ட்ரம்ப் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share