"CHICKEN POX"..! வீரியமெடுக்கும் சின்னம்மை நோய்... சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!
சின்னம்மை நோய் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
சின்னம்மை நோய் (Chickenpox) தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் காரணமாக ஏற்படும் மிகவும் தொற்று நோயாகும். கோடை கால வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, குறிப்பாக பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இது போன்ற தொற்றுகள் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால், தமிழக சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.
மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சின்னம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக, மதுரையில் தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்த நோய் மிக எளிதில் பரவக்கூடியது. இருமல், தும்மல் மூலம் வெளியேறும் சிறு துளிகள் வழியாகவோ, பாதிக்கப்பட்டவரின் கொப்புளங்களில் உள்ள திரவத்துடன் நேரடி தொடர்பு ஏற்படும்போதோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வழியாகவோ பரவுகிறது.
குழந்தைகள் குறிப்பாக 1-10 வயதினர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பெரியவர்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் உள்ளனர். காய்ச்சல், உடல் சோர்வு, பசி இன்மை போன்றவை தொடங்கி, பின்னர் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள், நீர்க்கட்டிகள் போன்ற கொப்புளங்கள் தோன்றும். இவை தீவிரமாக அரிப்பு ஏற்படுத்தும் எனக்கு கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!
வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை நோய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ள நிலையில், சின்னம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளது. நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை உண்ணுவது, அடிக்கடி கைகழுவுதல் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹப்பாடா... ஒரு வழியா வந்தாச்சு... பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவுக்கு அனுமதி..!!