×
 

CM கர்நாடகா செல்கிறாரா... இல்லையா..? விஜயின் முடிவு என்ன.? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கர்நாடகா செல்லும் விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜயே அறிவிப்பார் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்னையில் முக்கிய திருப்பமாக, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட காவிரி தொடர்பான விவகாரங்களை இரு முதல்வர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்க உள்ளனர். இந்த சந்திப்பு இரு மாநிலங்களுக்கும் இடையிலான நீர் பங்கீடு பிரச்னையில் புதிய உரையாடலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் கர்நாடக பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவிற்கு முதல்வர் விஜய் செல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தனியார் பள்ளி கட்டணம் தொடர்பாக கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ராகுல் பேசட்டும்... கூட்டணியை உடைக்கத் தயார்... காவிரி விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்..!!

முதல்வர் விஜய் கர்நாடகா செல்வாரா இல்லையா என்பது குறித்து அவரை அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா சென்று அம் மாநில முதல்வரை சந்திப்பதாக தகவல் பரவும் நிலையில் இவ்வாறு ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிங்க: கர்நாடகாவை நம்புறது WASTE..! அனைத்து கட்சி கூட்டம்..! தமிழக அரசுக்கு திருமா. கோரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share