வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது பிரார்த்திக்கவும் முடியாது என மீனாட்சி அம்மன் கோயில் மின்தடையை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோதே திடீர் மின்தடை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது; நிம்மதியாகப் பிரார்த்திக்கவும் முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகத் திருக்கோயில் வளாகத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போதே மின்தடை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மின்வெட்டு எந்த அளவிற்கு நீடிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே கண்கூடான சான்று.

இதையும் படிங்க: கசாப்பு கடை ஆடுகளா மக்கள்.? செஞ்சி சிறுமி எங்கே.? “சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… சாடிய EPS..!!

இந்த ஆட்சியில் மக்கள் தங்களது வீடுகளில் நிம்மதியாக வாழவும் முடியாது; கோயிலுக்கு வந்து மன அமைதியுடன் இறைவனைப் பிரார்த்திக்கவும் முடியாது என்ற அவல நிலைமைதான் நிலவுகிறது. மின்சாரத் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் மக்கள் நலனில் அலட்சியம் காட்டும் இந்த நிர்வாகத்தால் பொதுமக்கள் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்று அவர் ஆவேசமாகக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: “உங்க நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே சிரிக்குது…” – தவெக அமைச்சர் சிடிஆரை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடியார்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी