“எப்புட்றா நீ போடலாம்...” - நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!
பிரபல வணிக நிறுவனத்தில் விஜய் பாடல் ஒளிபரப்பப்பட்ட போது நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விஜய் பாடல் ஒலிக்கப்பட்டதாக ரகளையில் ஈடுபட்டனர்.
கடந்த 30 நாட்களாக பரபரப்பாக இயங்கி வந்த தமிழக தேர்தல் களம் நேற்று மாலையுடன் அமைதியானது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் அடங்கிய அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும். பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது உள்ளிட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உதகையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்த ஸ்பீக்கர்களில் 6 மணிக்கு மேல் விஜயின் பாடல்கள் ஒலி பரப்பப்பட்டுள்ளது. இதனால் அங்கு சென்ற நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி விஜய் பாடல் ஒலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சென்ற நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்துள்ள நிலையில் எப்படி விஜய் பாடல் போடலாம் என நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 10 முறை தோற்ற சேலத்துக்காரர்! எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரடி சவால்!
அப்போது அந்த பகுதிக்கு வந்த தவெகவினரும் நாம் தமிழர் கட்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் புகாரின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோசியல் மீடியாக்களில் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்த தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேரடியாக மோதலில் ஈடுபட்டது காண்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!