×
 

எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

முன்னாள் முதலமைச்சரும், தியாகியுமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு (பிப்ரவரி 1, 2026), அவருக்குச் சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஓமந்தூர் ராமசாமி ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காந்திய வழியில் நின்று இந்திய விடுதலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் ஓமந்தூரார் ராமசாமி. உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அனைத்து முக்கியப் போராட்டங்களிலும் முன்னின்று உழைத்தவர்.

இதையும் படிங்க: "சமத்துவத்திற்கு ஒரு புதிய விடியல்!" - UGC புதிய விதிகளை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

இந்தியா 1947-ல் விடுதலையடைந்த போது, நம் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, சுதந்திர இந்தியாவின் புதிய விடியலைத் தமிழ்நாட்டிற்குத் தலைமை தாங்கி நடத்தியப் பெருமைக்குரியவர். அரசியலில் தூய்மையையும், நிர்வாகத்தில் நேர்மையையும் ஒருங்கேக் கடைபிடித்தவர் ஓமந்தூரார்.

பெரியார் - அண்ணா போற்றியத் தலைவர்: சமூகநீதிச் சிந்தனைகளைத் தனது ஆட்சியில் நிலைநாட்டியதற்காகத் தந்தை பெரியாராலும், பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்டவர். அவரது எளிமையும், ஆடம்பரமற்ற வாழ்வும் இன்றும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறந்தப் பாடமாகத் திகழ்கிறது.

ஓமந்தூரார் ஐயாவின் நினைவைப் போற்றும் வகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவக் கல்வி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது, தியாகத்திற்கும் எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த ஒரு மாபெரும் தலைவருக்குத் தமிழக அரசு செலுத்தும் உரியக் கௌரவமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அவரது பெயரில் மருத்துவமனை மற்றும் அரசுத் தோட்டம் இயங்கி வரும் நிலையில், தற்போது அமையவுள்ளச் சிலை அவரது புகழை மேலும் ஓங்கச் செய்யும்.

இதையும் படிங்க: “முத்தரையர் மறுவாழ்வு திட்டம் வேண்டும்!” - முதலமைச்சரிடம் தமிழர் தேசம் கட்சி தலைவர் கோரிக்கை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share