டைம் குடுங்க ப்ளீஸ்..! விரைவில் மகளிர் உரிமைத்தொகை... முதல்வர் விஜய் உறுதி..!
மகளிர் உரிமைத்தொகை சீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாகியுள்ள நிலையில், மகளிர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத்தொகை தொடர்பான எதிர்பார்ப்பு பெரும் அளவில் எழுந்துள்ளது.
குறிப்பாக, மாதம் ரூ.2,500 என்ற அளவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது பலரின் உறுதியான நம்பிக்கையாக மாறியுள்ளது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் நலனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.
அரசு ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தில் விலக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த வாக்குறுதி பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: 717 மதுக்கடைகள் மூடல் ஒரு நல்ல தொடக்கம்..!! CM விஜய்க்கு நன்றி.. வானதி சீனிவாசன் வரவேற்பு..!!
இந்த நிலையில் புதிதாக தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்று இருக்கும் நிலையில் மறு சீரமைப்பு செய்து திட்டத்தை மாற்றுவதற்குள் ஏற்கனவே கொடுத்து வந்த ஆயிரம் ரூபாயை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!