மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..! முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு..!!
நாளை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் போலியோவை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக, ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை (நாளை) மாநிலம் முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டு சொட்டு போலியோ தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில் 43,051 மையங்கள் செயல்படும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊரக மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்கள், பள்ளிகள், பகல் உணவு மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். முதல் நாளில் அனைத்து மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும். ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தற்காலிக மற்றும் போக்குவரத்து மையங்களில் தவறிய குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா 2014 முதல் போலியோவிலிருந்து தடுப்பு நாடாக அறிவிக்கப்பட்டாலும், உலகின் பல பகுதிகளில் இன்னும் போலியோ பாதிப்பு உள்ளதால், தொடர்ச்சியான தடுப்பு முயற்சிகள் அவசியம்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!
வழக்கமான தடுப்பூசி அட்டவணையில் 6, 10, 14 வாரங்களில் போலியோ தடுப்பூசி பெற்றிருந்தாலும், பல்ஸ் போலியோ முகாமில் வழங்கப்படும் இரண்டு சொட்டு மருந்து கூடுதல் நோய்த்தடுப்பு சக்தியை வழங்குகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்பு தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்த முகாமில் தவறாமல் சொட்டு மருந்து கொடுக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த முகாமினை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க: சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!