"முடிஞ்சுது"... அஞ்சே நிமிஷத்துல கொளத்தூர் ஆடி போச்சு..!! ஸ்டாலின் சைகையால் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..!!
தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் கொளத்தூர் தொகுதி குறித்தும் முன்னாள் முதல்வர் சைகையையும் செய்து காண்பித்தார்.
தமிழக சட்டப்பேரவை மூன்றாம் நாள் அமர்வு இன்று கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். ஓசி, 1000 ரூபாய் கேஸ் என்றெல்லாம் கூறினார்கள் என்று குறிப்பிட்டார். EVILS..EVILS.. என்று DEVILS பேசக்கூடாது என சைவையுடன் முதல்வர் விஜய் செய்து காட்டினார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல் வருமான ஸ்டாலினை போல ஆக்ஷன் செய்து முதல்வர் விஜய் விமர்சித்தார். பேரவையில் நடந்த கலைஞர் பட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பின் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்றும் குறிப்பிட்டார். இதை நான் கேட்டால் குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்வு எனக் கூறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டு திமுக போல் இரட்டை வேடம் போட மாட்டோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது என்றும் கூறியுள்ளார். சோபா மாடல் ஆட்சி என்றால் என்பது புரிவதற்கே தனக்கு பல நாட்கள் ஆனது என்றும் கூறியுள்ள முதல்வர் விஜய், ஊழலில் ஊறி போனவர்கள் ஆட்சியில் பங்கு என்பதை அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எதுக்கு கதறுறீங்க..? சட்டசபையை தெறிக்க விட்ட முதல்வர் விஜய்..! கொந்தளித்து திமுகவினர் வெளிநடப்பு..!!
சட்டம் ஒழுங்கு தொடர்பாக யாருக்கு என்ன ஆலோசனை இருந்தாலும் கூறலாம் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும், கொளத்தூர் தொகுதியையும் விமர்சித்து பேசிய முதல்வர் விஜய் டாஸ்மாக் கட்சி நிதி என்று கூறியதால் திமுகவினர் கொந்தளித்து போனார்கள்.
இதையும் படிங்க: "முந்தைய ஆட்சியின் ஓட்டை"... எங்களுக்கு பணத்தை சுருட்ட தெரியாது தான்..! CM விஜய் ON FIRE..!!