×
 

எதுக்கு கதறுறீங்க..? சட்டசபையை தெறிக்க விட்ட முதல்வர் விஜய்..! கொந்தளித்து திமுகவினர் வெளிநடப்பு..!!

முதல்வர் விஜய் சட்டசபையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை மூன்றாம் நாள் அமர்வு என்று கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். முதல்வர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே, சபாநாயகர் சமாதானப்படுத்த முயன்றும் கேட்காமல் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் விஜய் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி தருகிறேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் வழிமுறையை திமுகவினர் பின்பற்ற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். தமிழக வெற்றி கழகத்தினரை நோக்கி திமுகவினர் கொந்தளித்தனர். தமிழக வெற்றி கழக உறுப்பினர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததால் பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தினரை நோக்கி உரிமையில் திமுகவினர் பேசுவதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டினார்.

மற்ற எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது தவறான கருத்து என்றாலும் நாங்கள் அமைதியாக தான் இருந்தோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார் பார்ட்டி ஃபண்ட் என்று தான் முதல்வர் சொன்னார் என்றும் எந்த பார்ட்டி என சொல்லவில்லை., அதற்காக திமுகவினர் எதற்காக கோபப்படுகின்றனர் என்று கேட்டுள்ளார். கடும் அமளிக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது முதலமைச்சர் விஜய் ஆதாரத்தோடு பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: "முந்தைய ஆட்சியின் ஓட்டை"... எங்களுக்கு பணத்தை சுருட்ட தெரியாது தான்..! CM விஜய் ON FIRE..!!

டாஸ்மாக் மட்டுமல்லாமல் பல துறைகளில் கட்சியை நிதி வசூலிக்கப்பட்டதாக முதலமைச்சர் புகார் தெரிவித்தார். நாங்கள் அனுப்பி வைத்தவர்கள் என்று சொல்கிறீர்களே அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் எதற்காக கதறுகிறீர்கள் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். மக்கள் பணத்தை தொட்டவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம் என்று முதல்வர் விஜய் எச்சரித்தார். முதல்வர் விஜய் பேசப்பேச கொந்தளித்த திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதையும் படிங்க: எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சியா..? உதயநிதிக்கு பேரவையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share