இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி திட்டங்கள்! காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்வேறு பக்தர் பயன்பாட்டுக் கட்டடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தென் தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இருக்கண்குடி மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அரசு சார்பில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய முடி காணிக்கை மண்டபம், சுகாதாரமான சூழலில் உணவு அருந்தும் வகையில் விசாலமான அன்னதானக் கூடம் மற்றும் விருந்து மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை வார்ப்பதா.? வேல்முருகன் ஆவேசம்.!!
மேலும், திருக்கோயில் வளாகத்தில் முறைப்படுத்தப்பட்ட வர்த்தக வசதிகளை உருவாக்கும் வகையில் 235 புதிய பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இத்திட்டங்களை முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!