×
 

வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை வார்ப்பதா.? வேல்முருகன் ஆவேசம்.!!

வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை பார்ப்பதா? என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லையா, வடமாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகள் தாரைவார்க்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்கள் 32 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கும்போது, ஒப்பந்த நிறுவனங்களிடம் அரசுப் பணிகளை ஒப்படைப்பதா என்று அவர் கேட்டுள்ளார்.தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரப் பணியிடங்கள் காலியாகக் கிடக்கும் நிலையில், நடத்துநர் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 1,797 நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமின்றி, அதற்கான ஒப்பந்தம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் வேலைக்காகப் பதிவு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கும்போது, அவர்களைப் புறக்கணித்துவிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவின்படி, 31.03.2025 நிலவரப்படி 32,35,683 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர் என்றும், இந்த 32 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் நடத்துநர் பணிக்குத் தகுதியானவர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் போக்குவரத்துக் கழக வேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: புழல் ஏரியில் கழிவுநீரா.? குடிநீருக்கு பேராபத்து..! வேல்முருகன் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லை, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசு வேலை இருக்கிறதா, அது எப்படி என்று கேட்ட அவர், இந்த முரண்பாட்டைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் வரிப்பணத்தால் உருவாக்கப்படும் அரசு நிறுவனங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் இயங்கும் பொதுத்துறை அமைப்புகளிலும் கிடைக்கும் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டின் குடிகளுக்கே முழுமையான முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதே தங்களது கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார். 

 

 

 

 

இதையும் படிங்க: குண்டும் குழியுமான சாலைகள்.! பராமரிப்பில்லாத அரசு கட்டிடங்கள்..! பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் உரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share