அரசு பள்ளிகளில் ஆயுத கலாச்சாரம்..! அமைச்சர் ராஜ்மோகனை கண்டித்த நயினார் நாகேந்திரன்..!!
பள்ளிகளில் ஆயுத கலாச்சாரம் அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் நிரஞ்சான் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறையிலேயே வைத்து மாணவனை கத்தியால் சக மாணவன் குத்திய கொடூரம் நிகழ்ந்து உள்ளது. தனிப்பட்ட பகை காரணமாக மாணவன் கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. காயமடைந்த மாணவர் பட்டியலினத்தவர் என்ற தகவல் வெளியாக இருக்கும் சூழலில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்திக்குத்து சம்பவத்தை காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எதற்காக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஆயுதக் கலாச்சாரம் பரவுவதாகவும் ஆளும் அரசு இதனை அலட்சியப்படுத்துகிறதா என்றும் கேள்வி எழுப்பினார். சிவகங்கை அருகேயுள்ள நிரஞ்சான் என்ற கிராமத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வகுப்பறையிலேயே சக மாணவன் கத்தியால் குத்தியதாகவும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவனை, சக மாணவன் மண்வெட்டியால் தாக்கியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பதற செய்வதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன் கட்சி ஊழலையே தட்டிக் கேட்க முடியாத CM..! லஞ்ச வேட்டை..! நயினார் தாக்கு.!
அறநெறிகளை போதிக்க வேண்டிய பள்ளிகளில், ஆயுதங்கள் புழங்குவது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமன்றி, ஆரோக்கியமான சமூகத்திற்கும் அழகல்ல. குறிப்பாக, அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே இதுபோன்ற மோதல்கள் தொடர்வது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்விக்கான சான்றாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.
எனவே, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தனியார் பள்ளிகளை “comfortable” ஆக வைத்துக் கொள்வதற்காக மட்டும் பல நடவடிக்கைகளை அமைச்சர் ராஜ்மோகன் எடுத்து வருவதாகவும், மாணவர்களுக்கு இடையேயான கோப, தாபங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!