×
 

அண்டை மாநிலங்களுக்கு தடை... இரவோடு இரவாக தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு...!

மாநிலத்தில் உற்பத்தியாகும் ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் முழுமையாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்களை கொண்டு செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கத் தடுப்பு, கனிமங்கள் போக்குவரத்து மற்றும் சேமிப்பு விதிகள், 2021-ல் செய்யப்பட்ட புதிய திருத்தத்தின் அடிப்படையில், மாநிலத்தின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், சட்டவிரோத சுரங்கத் தோண்டல் மற்றும் கனிமக் கடத்தலை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனரக லாரிகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் மாநிலச் சாலைகள் சேதமடைவது, எல்லைப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, சாலை விபத்துகள் அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களும் இந்த முடிவுக்கு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் கட்டுமானத் துறைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் உற்பத்தியாகும் ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் முழுமையாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்றும், தடை உத்தரவை மீறுவோர் மீது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share