×
 

திமுகவை வச்சி வெளுத்து விடுங்க... மக்களுக்கு படு ஓபனாக Freedom கொடுத்த சி.எம்.விஜய்...!

இன்னும் ஆட்சியில் இருப்பது போல நடந்து கொள்ள வேண்டாம் – திமுகவை விமர்சித்து விஜய் கருத்து

இன்று கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். "என்னவோ இன்னும் நீங்கள் தான் ஆட்சியில் இருப்பது போல, 'விஜய் கரூருக்கு போகக்கூடாது, இங்கு செல்லக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது' என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

ஆட்சியில் இருந்தபோதுதான் இவ்வளவு கட்டுப்பாடுகளையும், எஸ்.ஓ.பி. (Standard Operating Procedure) விதிமுறைகளையும் கொண்டு வந்தீர்கள். இப்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் அதே மனநிலையிலேயே செயல்படுவது எந்த வகையில் நியாயம்?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன்... இன்னும் கனவிலேயே இருக்கிறீர்களா? முதலில் விழித்துக்கொள்ளுங்கள். யதார்த்தத்திற்கு வாருங்கள். உங்கள் ஆட்சி முடிந்து, வீட்டிற்குப் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

இதையும் படிங்க: “விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா...” - அரசு வேலை வழங்குவதில் மோசடி?... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் கண்ணீர் மல்க புகார்...!

'ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்' என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் கடுமையாகக் கருத்து தெரிவித்த பிறகும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஒழுங்கா படி, ஒழுங்கா படி என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி மண்டேலியே நறுக்கு நறுக்குன்னு சம்மட்டியாலேயே அடிச்சும் இந்த திமுகா முழிச்சிக்கலைன்னா,  அப்போ கொஞ்சம் கஷ்டம்தான்.

அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜமானவை. அதற்காக பதவி மீதான வெறியுடன் செயல்பட வேண்டிய அவசியமில்லை. நல்ல விதமாகவும், நியாயமான முறையிலும் அரசியல் செய்யுங்கள். ஆனால் அதுதான் உங்களுக்குத் தெரியவில்லை என்பதே வேதனை.

இந்த தீய சக்தி திருந்தும் என்று எதிர்பார்த்தாலும், அது நடக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது.

எனவே, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்களே, உங்கள் ஜனநாயக வாக்குரிமையைப் பயன்படுத்தி திமுகவுக்கு தக்க பதிலடி கொடுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.  மீண்டும் சந்திக்கும் வரை நன்றி. வணக்கம் எனக்கூறினார். 

இதையும் படிங்க: முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share