#BREAKING குழந்தையை மிதித்தே கொன்ற யானைகள்... வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்.. பாட்டி, பேத்தி பரிதாபமாக பலி...!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே இரண்டரை வயது குழந்தையும் அவரது பாட்டியும் காட்டு யானைகள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே இரண்டரை வயது குழந்தையும் அவரது பாட்டியும் காட்டு யானைகள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஊமாண்டி முடக்கு ஐந்தாவது டிவிஷன் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் இரண்டரை மணி அளவில் நுழைந்த இரண்டு காட்டு யானகள் அங்கு வசிக்கும் மாரியப்பன், சுகன்யா தம்பதியின் வீட்டு ஜன்னலை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த ஹேமா ஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தையை இழுத்து தாக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலே குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தையை காப்பாற்ற போராடிய 51 வயதான பாட்டி அஷராவையும் யானை தள்ளிவிட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த பாட்டியும் உயிரிழந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல காட்டு யானைகள் உள்ளே வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கோர விபத்து; லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - இளம் பெண் உட்பட மூவர் பலி...!
இதையும் படிங்க: “வாயில அடி.. வாயில அடி...” - விஜயை எதிர்த்த அண்ணாமலைக்கு ஒரே மேடையில் பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்...!