ஆதவ் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கனும்..! கரூர் கணக்கு... CPI வீரபாண்டியன் அறிவுரை..!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று வீரபாண்டியன் தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பேசினார். அப்போது, கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் தவெக ஒருபோதும் விடாது” என்று வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார். “கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் தற்செயலானது அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி வேண்டுமென்றே இத்தகைய சதியை நடத்தியதாகக் கூறினார். தவெக தலைவர் விஜய் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செல்லும் போது இதுபோன்ற கூட்ட நெரிசல்களை உருவாக்கி சதி செய்ய திமுக திட்டமிட்டதாகவும், அதனால்தான் விஜய் இறுதி நாள் பிரச்சாரங்களைத் தவிர்த்தார் என்றும் அவர் விளக்கமளித்தார். தேர்தலுக்கு பயப்படாத தவெக, தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: "திடீரென முதல்வரை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்"..! விஜயிடம் பேசியது என்ன..? பரபரப்பு பேட்டி..!!
ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது ஏற்புடையது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார். அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். கணக்குத் தீர்ப்போம் என பேசி இருப்பது அமைச்சர் பொறுப்புக்கு பெருமை சேர்க்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆவின் விநியோக கட்டுப்பாடு... நிலைமை மோசமாகும்..! சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை..!